Asianet News TamilAsianet News Tamil

41 கோடி பேர்களின் போன் நம்பர்களை ஆட்டையைப் போட்ட சமூக வலைதளம்... இனி ஜாக்கிரதை மக்களே..!

41 கோடியே 9 லட்சத்திற்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 
 

Do you have a Facebook account? No more people who are cautious
Author
USA, First Published Sep 5, 2019, 11:56 AM IST

41 கோடியே 9 லட்சத்திற்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

உலக அளவில் அதிகம்பேர் பயன்படுத்தப்படும் சமூகவலைதளமாக முகநூல் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், முகநூல் நிறுவனம் பயனர்களின் தகவலை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதாக தகவல்கள் வெளியாகி பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Do you have a Facebook account? No more people who are cautious

இந்த சர்ச்சை குறித்து முகநூல் நிறுவனம் விளக்கமளித்து வருகிறது. இந்நிலையில், மற்றொரு தரவு மீறலில், ஃபேஸ்புக் பயனர்களுடன் இணைக்கப்பட்ட 41 கோடியே 9 லட்சத்திற்கும் அதிகமான தொலைபேசி எண்கள் திறந்த ஆன்லைன் தரவுத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தரவுத்தளத்தில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பேஸ்புக் பயனர்களின் 13 கோடியே 3 லட்சம் மில்லியன் பதிவுகள், இங்கிலாந்து பயனர்களின் 18 மில்லியன் பதிவுகள் மற்றும் வியட்நாமில் 50 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பதிவுகள் அடங்கியுள்ளதாக டெக் க்ரஞ்ச் தெரிவித்துள்ளது.Do you have a Facebook account? No more people who are cautious

மில்லியன் கணக்கான பயனர்களின் தொலைபேசி எண்களை அவர்களின் ஃபேஸ்புக் ஐடிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்பேம் அழைப்புகள் மற்றும் ஆகியவற்றின் மூலம் அவர்களது மொபைல் எண் புதிய சிம் கார்டுக்கு மாற்றப்படுகிறது. ஹேக்கை பின்னணியாகக் கொண்டு இலாப நோக்கற்ற அமைப்பான ஜிடிஐ அறக்கட்டளையின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான சன்யம் ஜெயின் இந்த தரவுத்தளத்தைக் கண்டுபிடித்துள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios