கொரோனா தொற்றால் ஊரே அடங்கில் இருக்கும் போது பிரபல பூங்காவில், ஒரு ஜோடி பட்டப்பகலில் உல்லாசம் அனுபவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவின் தாக்கம் இங்கிலாந்தை ஆட்டம் காண வைத்து வருகிறது. இந்தநிலையில், அங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மக்கள் பெரும் பீதியில் தங்களின் வீட்டிலே அடைந்து கிடக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சம்பவம் ஒன்று லண்டன் நகரில் கடந்த சனிக்கிழமை அரங்கேறி இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அவசரத் தேவைக்காக மக்கள் வெளியே சென்று வரவும், உடற்பயிற்சி செய்வதற்காக பூங்காக்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரை செல்லவும் அனுமதி உண்டு. இந்த சூழ்நிலையில் உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை, ஒரு ஜோடி உல்லாசம் அனுபவிக்க பயன்படுத்திக்கொண்டு இருக்கிறது. லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே ‘செயின்ட் ஜேம்ஸ்’ என்ற பிரபல பூங்கா ஒன்று உள்ளது. அங்கு பிற்பகலில் வந்த ஒரு ஜோடி ஒன்று, அங்குள்ள நடைபாதையில் படுத்து உல்லாசம் அனுபவித்து உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் பலரும் உடற்பயிற்சி செய்து கொண்டும், சைக்கிளிலும் வலம் வந்துள்ளனர். ஆனால், அதை எல்லாம் சிறிதும் கண்டுகொள்ளாமல், சுமார் 15 நிமிடம் வரை அந்த ஜோடி உல்லாசத்தில் மூழ்கி இருந்துள்ளது. இந்நிலையில் அங்கே குதிரைகளில் ரோந்து சுற்றி வந்த பாதுகாவலர்கள் இருவர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர்களை எச்சரிக்காமல் அந்த ஜோடியிடம் சென்று ‘சமூக இடைவெளி அவசியம் தேவை’ என விளக்கிக் கூறியது தான் வேடிக்கையின் உச்சம். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஜோடி, பாதுகாவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த சமயம் பார்த்து சைக்கிளில் வந்த ஒருவர், தனது செல்போனில் இளம் ஜோடியின் லீலைகளை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விட்டார். இதனை பார்த்த நெட்டிசனைகள் இளம் ஜோடியை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Apr 14, 2020, 11:20 AM IST