சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மலை மீது செல்ல 4 கிலோ மீட்டர் தார் சாலை மற்றும் 1320 படிக்கட்டுகளும் உள்ளன.
இந்த படிக்கட்டுகளில் தினமும் ஏராளமான காதல் ஜோடிகள் அமர்ந்துகொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுவது வழக்கம். ஜோடி, ஜோடியாக சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு அத்துமீறி முத்தம் கொடுப்பதும், கட்டிப் பிடிப்பதுமாக இருப்பார்கள்.  

இவர்களை கண்காணிக்க அடிக்கடி சென்னிமலை போலீசார் அங்கு சென்று, காதல் ஜோடிகளை எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவதும் உண்டு.நேற்றும்  இதே போல் 8 காதல் ஜோடிகள் ஆங்காங்கே படிக்கட்டுகளில் அமர்ந்து கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருந்துள்ளனர்.

அதில் ஓரிரு ஜோடிகள் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  குறிப்பாக ஒரு ஜோடி மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் படிக்கட்டிலேயே செக்ஸ் வைத்துக் கொள்ள முயன்றனர்.

அப்போது படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் முருகன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அங்கு இந்த காதல் ஜோடிகள்  அத்துமீறி நடந்து கொள்வதைப்  பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முகம் சுழித்தம் படி சென்றனர். 

மேலும்  சிலர் தங்களை மறந்து  திடீரென கட்டி பிடித்து முத்தமிட்டும்  செம மூடில்  இருந்தனர்.
பின்னர் அந்த காதல் ஜோடிகளை பக்தர்களே படிக் கட்டுகளில் இருந்து அடிவாரம் வரை அழைத்து கொண்டு போய்  எச்சரித்து அனுப்பினார்கள். ஒருசில ஜோடி முரண்டுபிடிக்க அவர்களை விரட்டியடித்தனர்.