சென்னை திருவொற்றியூரில் உல்லாசத்திற்கு இணங்க மறுத்த 68 வயது மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த வாலிபரை போலீவார் கைது செய்துள்ளனர். 

சென்னை திருவொற்றியூர் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன்  இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா வேலை செய்யாததால் கொலையை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர், வேறு ஒரு இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கொலை நடந்த அன்று இரவு, ஒரு நபர் வேகமாக சென்று கண்டெய்னர் லாரியில் ஏறி செல்வது தெரியவந்தது. 

இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்று தெரியவந்தது. அவரை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், மருத்துவமனை அருகில் உள்ள மதுபான கடையில் மது அருந்தி விட்டு சென்றபோது அங்கிருந்த மூதாட்டியை கண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் சென்று உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுக்கவே பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

பின்னர், மூதாட்டி அங்கிருந்து எழுந்து, தப்பி ஓடியதால் ஆத்திரமடைந்து அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை பலமாக தாக்கியதாகத் ஜெயக்குமார் தெரிவித்தார்.மேலும், உயிரோடு இருந்தால், தான் மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற அச்சத்தில் குடிபோதையில். அருகில் இருந்த கல்லை மூதாட்டியின் மீது போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கொலையாளி ஜெயக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.