நித்தியானந்தா தன்னுடன் உல்லாசம் அனுபவித்து தன்னை அந்தரங்க சேவைக்கு உட்படுத்தினார் எனவும், காதலிப்பதாகக் கூறி தொடர்ந்து தனது செல்போனுக்கு குறுந்தகவல்கள்  அனுப்பினார் எனவும் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  சர்ச்சை என்றால் நித்யானந்தா நித்யானந்தா  என்றால் சர்ச்சை என்பது எல்லோருக்கும் தெரியும்.  கர்நாடக மாநிலத்தில் நித்யானந்தாவின்  ஆசிரமம் இயங்கி வருகிறது .  இந்நிலையில் அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. 

சில வருடங்களுக்கு முன்பு ஆர்த்தி ராவ் என்ற பெண் நித்தியானந்தா மீது பாலியல் புகார் கூறினார். வழக்கு விசாரணையில்போது தனக்கு ஆண்மைத்தன்மை இல்லை என அவர் சார்பில் மனுத்தாக்கல்  செய்யப்பட்டது .  அத்துடன் நித்யானந்தா ஆசிரமத்தில்   பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என புகார் எழுந்தது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்ற நபர்,  தனது மகள்களை பார்க்க கூட அனுமதி அளிக்கவில்லை என்று நித்யானந்தா ஆசிரமம் மீது குற்றஞ்சாட்டினார்.  இந்நிலையில் நித்தியானந்தாவின் சமூகவலைதளத்தின் முன்னாள் பொறுப்பாளரும் கனடா நாட்டு குடியுரிமை  உடையவருமான சாரா ஸ்டெப்னி (மா நித்யா தேவி) என்ற பெண் பெங்களூரு ராம்நகர் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளரிடத்தில் புகார் ஒன்று கூறியுள்ளார். 

அதில்,  நித்தியானந்தாவின் கவர்ச்சி பேச்சில் மயங்கிய நான் அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு வந்து இங்கேயே தங்கிவிட்டேன், அங்கு எனக்கு சமூக  வலைதளத்தை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.  நித்யானந்தாவின் கவர்ச்சி பேச்சில் மயங்கி கிடந்த போது என்னிடம் அவர் தவறான முறையில் நடந்து கொண்டார்,  அவருக்கு ஆண்மை இல்லை என்று கூறப்படுவது பொய்,  நித்யானந்தாவுக்கு நல்ல ஆண்மை தன்மை இருக்கிறது. பாலியல் உறவில் ஈடுபடும் திறனும் அவருக்கு நன்கு உள்ளது.  ஆர்த்தி ராவ் அவர் மீது கூறிய புகார் உண்மை. என  அவர் சுமார் 20 பக்கங்கள் கொண்ட புகார் மனுவில் நித்தியானந்தா  குறித்தும், அவர் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்தும் தெரிவித்துள்ளார். அதில் தனக்கு காதல் ரசம் சொட்ட சொட்ட வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் இமேஜ்கள்,  காம களியாட்ட புகைப்படங்களை எனக்கு அனுப்பினார்.  என்றும்  அனுப்பியதற்கான  ஆதாரத்தையும் சாரா புகாரில் இணைத்துள்ளார்.

அதில் "நான் உன்னை காதலிக்கிறேன்"  "உன் அன்பு என்னை கிறங்கடிக்கிறது" என்ற பாணியில் மெசேஜ்கள் உள்ளன,  2015ஆம் ஆண்டு ஆசிரமத்தில் வசித்த எனக்கு 36 மாதங்கள் கழித்தே  நித்யானந்தாவின் உண்மை முகம் தெரிந்தது.  அங்கு சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் ஆன்மீகம் என்ற பெயரில் நடக்கிறது.  நித்யானந்தா என்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டார் இரண்டு முறை அவருக்கு அந்தரங்க சேவை செய்ய வற்புறுத்தப்பட்டேன் என அவர் தனது புகார் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.