ஆட்டோ கட்டணம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனருக்கம் சவாரிக்கு வந்த பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் அந்தப் பெண்ணிடத்தில் நடந்துகொண்ட விதம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .  பெங்களூரு ஹூலிமாவு பகுதியில் 32 வயதுடைய பெண் கடந்த வியாழக்கிழமை இரவு தன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட காத்திருந்தார் .  அப்போது தன்னை பிக்கப் செய்ய வருவதாக கூறிய கணவர் வருவதற்கு லேட் ஆனது . 

இதனால் வீட்டிற்கு ஆட்டோவில் செல்ல முடிவு செய்தார் அந்தப் பெண் .  அந்த பக்கம் வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி வீட்டுக்கு போகவேண்டும் கட்டணம் எவ்வளவு என்று கேட்டுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் அதிகம் காசு கேட்டதாக தெரிகிறது இதனால் அந்த பெண்  மிக அருகில் உள்ள தனது  பகுதிக்கு செல்ல எவ்வளவு கட்டணமா என கூறி  கொஞ்சம் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளும்படி கேட்டுள்ளார் .  ஆனால் அதற்கு அந்த ஆட்டோ டிரைவர் முடியாது என கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது,  இதனிடையே வாக்குவாதத்திற்குப் பின்னர்  சரி ஏறிக் கொள்ளுங்கள் என  ஆட்டோ டிரைவர் கூற, அதை நம்பி அந்த பெண்ணும் ஆட்டிவில் ஏறியுள்ளார்,  திடீரென்று ஒரு  குறுக்குச் சந்தில் ஆட்டோவை திருப்பிச் சென்றுள்ளார் ஆட்டோ டிரைவர்.  இதில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஆட்டோ நிறுத்தும்படி சத்தம் போட்டுள்ளார் . 

ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் மறுத்துவிட்டார், இதனால்  ஆட்டோவில் இருந்து கீழே குதித்து  பலத்த காயமடைந்து உள்ளார் அந்த பெண்.  உடனே தன் செல் போனை எடுத்து ஆட்டோவை  படம்பிடித்துள்ளார், இதில்  அதிர்ச்சியடைந்த அந்த ஆட்டோ டிரைவர் அங்கிருந்து மிக வேகமாக தப்பி ஓடிவிட்டார்.   உடனே அப்பெண் போலீசுக்கும் தனது கணவருக்கு போன் செய்து தகவலை கூற சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆட்டோ டிரைவர் குறித்து  விசாரணை நடத்திவருகின்றனர்
.