அசாமில் 12 வயது சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தும், வெறி தீராததால் கொன்று மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டம் சக்லா கிராமத்தில் 12 வயது சிறுமி சனிக்கிழமை காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த  12 சிறுமி கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 10ம் வகுப்பு மாணவர்கள் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்த மாணவர்கள் சிறுமியை கடத்திச் சென்று மறைவான இடத்தில் வைத்து வாயை பொத்தி கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், சிறுமியை வெளியில் விட்டால் உண்மையை சொல்லிவிடுவால் என்பதால் பயந்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.