டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான, சகோதரியின் தோழியுடன் அர்ச்சனா என்கிற பெண் கட்டிய கணவனை விட்டு விட்டு, ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த ரவிச்சந்திரனுக்கும், அர்ச்சனாவிற்கும்  திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு  2 மகன்களும் உள்ளனர். நவ நாகரீகத்தின் மீது அதிகம் ஈர்ப்புள்ள அர்ச்சனாவுக்கு, அவர் கேட்பதை எல்லாம் வாங்கி தந்து சந்தோஷமாக வைத்துக்கொண்டுள்ளனர் கணவர் ரவிசந்திரன்.

அதன்படி அவர் கையில் ஸ்மார்ட் போனும் இருந்துள்ளது. ஆரம்பதில் பொழுது போக்கிற்காக டிக் டாக் செய்ய துவங்கிய அர்ச்சனா பின் அதிலேயே மூழ்கி போனார். இந்நிலையில் தான் அர்ச்சனாவிற்கு அவருடைய சகோதரியின் தோழி அஞ்சலி டிக் டாக் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

இருவரும் அடிக்கடி விதவிதமான டிக்டாக் செய்து அதனை  சமூக வலைதளங்களில்  பதிவு செய்து,  லைக்குகளை பெறுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளனர். மேலும் நாள் செல்ல... செல்ல... இவர்களின் டிக்டோக் பதிவு அதிகமானது போல்,  இவர்களும் நெருக்கமும் கூடியது.

மணி கணக்கில் பேச துவங்கினர். அடிக்கடி அர்ச்சனாவின் வீட்டிற்கும் வந்து சென்றுள்ளார் அஞ்சலி. இவர்களின் நடவடிக்கைகளை கவனித்த ரவிசந்திரன் மனைவி அர்ச்சனாவை கண்டித்ததுடன், அர்ச்சனாவிடம் இருந்து ஸ்மார்ட் போனையும் பிடிங்கி வைத்துள்ளார். 

இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அர்ச்சனா, தன்னுடைய அம்மா வீட்டுக்கு இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அம்மா வீட்டிற்குச் சென்றும்,  இவர் டிக்டாக் வேலையை ஆரம்பித்துள்ளார். இதனால் அங்கும் அர்ச்சனா பெற்றோர்கள் வன்மையாக கண்டித்ததால்,  தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அர்ச்சனா - அஞ்சலியுடன் ஓட்டம் பிடித்துள்ளார். 

அஞ்சலி பெண்ணாக இருந்த போதிலும், இவரின் பல டிக் டாக் வீடியோவில் கிராபிக் மூலம், தடி மீசை என வைத்து கொண்டு தன்னை ஒரு ஆணாக பாவித்து பல டிக் டாக் வீடியோ போட்டு அர்ச்சனாவை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.