குஜராத் மாநிலத்தில் 65 வயது முதியவர் ஒருவர் பசுவை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், சுந்தர் நகரில் இருக்கும் செயல்பட்டு வரும் பால்பண்ணை ஒன்றில் ஜூலை 4 தேதி அதிகாலை 4 மணியளவில் அங்கிருக்கும் பசுவுடன் உடலுறவு கொண்ட சம்பவம் அங்கிருக்கும் சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பே இந்த நபர், பசுவுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டதை பார்த்த அப்பகுதி தன்னார்வலர்கள் அவரை கையும் களவுமாக பிடிக்க மிக தீவீரமாக கண்காணித்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த மர்ம நபரை சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

பிடிபட்ட நபர் நவாப்கஞ்சின் கோண்டாவில் வசிக்கும் 65 வயதான ராஜ்குமார் அந்த மாட்டுக் கொட்டகைக்கு அடிக்கடி வந்து போயுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த ஆண்டு மே மாதம், அயோத்தியில் உள்ளூர் கால்நடை தங்குமிடத்தில் தங்கியிருந்த பல மாடுகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அசோகா கார்டன் காவல் நிலைய போலீஸார் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர்.