15 வயது சிறுமி கற்பழிப்பு.. சாகும் வரை ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மகள் முறை உள்ள 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய அம்ஜத் கான் என்பவருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

Amjad Khan has been sentenced to life imprisonment for sexually abusing a 15 year old girl and making her pregnant

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் அம்ஜத் கான். இவருக்கு வயது 44 ஆகும். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பரக்கத் நிஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். பரக்கத் நிஷாவிற்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். பரக்கத் நிஷாவின் முதல் கணவருக்கு பெற்ற மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

Amjad Khan has been sentenced to life imprisonment for sexually abusing a 15 year old girl and making her pregnant

இவருக்கு வயது 15 ஆகும். இந்நிலையில் அம்ஜத்கான் மகள் முறை உடைய 15 வயது சிறுமியை கடந்த 18. 3. 21 அன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதேபோன்று அடிக்கடி அவருடன் பாலியல் உறவு வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் 15 வயது சிறுமி கர்ப்பம் ஆனாள். ஆறு மாதம் கழித்த பிறகுதான் இந்த விஷயம் பரக்கத் நிஷாவிற்கு தெரியவந்துள்ளது.

கர்ப்பம் ஆகி ஆறு மாதம் ஆனதால், எதுவும் செய்ய முடியவில்லை. மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து பரக்கத் நிஷா அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அம்ஜத் கான் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

Amjad Khan has been sentenced to life imprisonment for sexually abusing a 15 year old girl and making her pregnant

இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா அம்ஜத் கானுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் ரூ50 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ 6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு விட்டதால் மீதமுள்ள தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மகள் வயதுடைய பெண்ணை கற்பழித்தவனுக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios