சென்னை,குன்றத்துார் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்பவர்  தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி, அபிராமி, அவர்களுக்கு அஜய், கார்னிகா  எனஇரண்டு குழந்தைகள் இருந்தனர்.

அபிராமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்திற்கும், கள்ளக்காதல் ஏற்பட்டது.இதற்கு இடையூறாக இருப்பதாக கருதி, கடந்த மாதம், 1ம் தேதி, பாலில் விஷம் கலந்து கொடுத்து, தன் இரண்டு குழந்தைகளையும், அபிராமி கொலை செய்தார்.

இதையடுத்து போலீசார், அபிராமி மற்றும் சுந்தரத்தை, 5ம் தேதி, கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அபிராமி, நேற்று முன்தினம் இரவு, தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. ஆனால் அதை, சிறை அதிகாரிகள் உறுதியாக மறுத்தனர். புழல் போலீசிலும், சிறைத்துறை மூலம், புகார் ஏதும் செய்யப்படவில்லை.'சமூக வலைதளங்களில், தவறாக தகவல்கள் பரவி வருகின்றன' என, சிறைத்துறை அதிகாரிகளும், புழல் போலீசாரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று  அபிராமியின் நெங்கிய உறவினர் ஒருவர் மனு மூலம் அவரை சந்தித்திருக்கிறார். அப்போது அபிராமி என் குழந்தைகளின் நினைவு என்னை வாட்டுகிறது. நான் மன்னிக்க முடியாத தப்பு செய்து விட்டேன். என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும் என கூறி அழுதிருக்கிறார்.. அடுத்த முறை வரும்போது போட்டோ எடுத்து வரச் சொல்லி கூறியிருக்கிறார் அபிராமி.