வேலியே புல்லை மேய்ந்தது போல, நகை திருடர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து நகையை கைப்பற்றி உரிய நபரிடம் காவலர்கள் ஒப்படைப்பார்கள் என்று பார்த்தால், காவலர்களே திருட்டு கும்பலிடம் சமரசம் செய்துகொண்டு பங்கு போட்டுக்கொண்ட சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.


 
மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும், தீர்த்து வைக்க காவல் நிலையம் உள்ளது என்ற மனநிலை தான் பக்க பலமே. ஆனால் ஒரு சில காவலர்கள் நடந்துகொள்ளும் விதம் மற்றும் தவறான செயலால் ஒட்டு மொத்த காவலர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. அதற்கு உதாரணமாக இந்த விஷயத்தை பார்க்கலாம்.

சென்னையின் பல இடங்களில் திருடப்பட்ட நகைகளை மீட்கச் சென்ற காவலர்கள் நகையை பங்கு போட்டுக் கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

இது குறித்து தனிப்படை காவலர்கள் மூவரிடம் சென்னை மாநகர காவல் இணை ஆணையர் விளக்கம் கேட்டு அறிக்கை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விடுப்பு எடுத்துக் கொண்டு கொள்ளை கும்பலைத் தேடிச் சென்று திருடிய நகைகளை அவர்களிடமிருந்து கைப்பற்றி, கொள்ளையர்களுடன் பங்கு போட்டு கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டு உள்ளனர். அதில் 20 சவரன் நகை மற்றும் 10 லட்ச ரூபாய் வரை  திருடர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு, அவர்களுடன் சமரசம் பேசி பங்கு போட்டு உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது