வெங்காயம் வாங்க  வரிசையில்  காத்திருந்த நபர்  மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தங்கத்தையே மிஞ்சும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு  உயர்ந்து வருகிறது.  வெங்காயத்தை உரித்தால் கண்ணீர்தான் ,  வரும் ஆனால் தற்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டால் கண்ணிலிருந்து ரத்தமே  வரும் என்ற  நிலைக்கு  மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

 

நாடு முழுவதும் வெங்காய விலை உச்சத்தில் இருந்து வருகிறது ,  இந்நிலையில்   நாள் ஒன்றுக்கு 25 ரூபாய்க்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வெங்காயம் என ஆந்திர அரசு  விற்பணை செய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள  உழவர்  சந்தைகளில்  வெங்காயத்தின் விலை குறைவாக இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் வரிசையில் காத்திருந்து வெங்காயம் வாங்கி வருகின்றனர்.  எந்த இடத்தில்  குறைந்த விலையில் வெங்காயம்  கிடைக்கிறதோ அங்கு   மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.  இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா நகரில் உள்ள உழவர் சந்தையில் நேற்று மாலை வெங்காயம் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர்.

 அப்போது அங்கு  வரிசையில் நின்றிருந்த  சம்பையா என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். இதைனையடுத்து அங்கிருந்தவர்கள் மீட்டு   அவரை அவரச சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு  அனுப்பி வைத்தனர் .  அப்போது மருத்துவமனை செல்லும் வழியிலேயே சம்பையா மரணமடைந்தார் .  இச்சம்பவம் ஆந்திர மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.