தூங்கிக்கொண்டிருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய இரண்டாவது மனைவியை திருச்செங்கோடு போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுக்காக இந்தக் கொடூரக்  கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட கல்யாண சுந்தரம், தண்ணீர் பந்தல் பாளையத்தில் வசித்து வருகிறார். எம்ஜிஆர் நகரில் விசைத்தறி தொழில் செய்து வந்த அவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர். அன்பான மனைவி, அழகான அக்குழந்தைகள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், நெசவு பட்டறையில் தன்னுடன் வேலை செய்து வந்த பூங்கொடி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே, இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து கொண்டார். 

இரண்டு மனைவிகள் இருந்தாலும், அவரில் பெண்கள் மீதான செக்ஸ் வெறி அடங்கவில்லை, அதே நெசவு பட்டறையில் வேலை செய்த பல பெண்களுடன் அவ்வப்போது லீலை தொடர்ந்தது. மேலும் பல பெண்களை தனது காம வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

முதல் மனைவி பாவம் அவர் எதுவும் கேட்காததால் கல்யாண சுந்தரத்தில் காம லீலைகள் தொடர்ந்ததால்,  இரண்டாவது மனைவி பூங்கொடியால் கண்டு காணமல் இருக்க முடியவில்லை. இதனால் கல்யாண சுந்தரத்துடன் திட்டி தீர்த்துள்ளார். அடிக்கடி வாக்குவாதம் சண்டை  போட்டு வந்துள்ளார். ஆனாலும் அடங்காத கல்யாணசுந்தரம். பூங்கொடியை தறி பட்டறைக்கு வரவேண்டாம் என்று கூறி தடுத்தார் கல்யாண சுந்தரம். 

இதனால் கணவன் மீது ஆத்திரம் அதிகமாகவே, பூங்கொடி சமயம் பார்த்து காத்திருந்தார். போதையில் உறங்கிக்கொண்டிருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினர்.  இந்த தகவல் அறிந்த போலீசார். சம்பவ இடத்திற்கு வந்து கல்யாண சுந்தரத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் போலீசாருக்கு கழுத்து அறுக்கப்பட்டிருந்த விதம் பல்வேறு சந்தேகத்தை அதிகரித்தது. பொலிஸாரின் சந்தேகத்துக்குக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளது. அதில், பூங்கொடி கல்யாண சுந்தரம் இடையே பல நாட்களாக  பிரச்சினையும் இருந்துள்ளது தெரிகிறது. கணவன் தன்னை ஏமாற்றி இரண்டாவதாக குழந்தைகளை விட்டு விட்டு திருமணம் செய்த நிலையிலும், தற்போது வேறு பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததால் தொடர்பு உயிரை காவு வாங்கியதாக, நடந்த உண்மைகளை பூங்கொடி போலீசில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் பூங்கொடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.