தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர் நடராஜன். 62 வயது முதியவரான இவர் வேலைக்காக சென்னையில் தங்கி இருக்கிறார். தண்டையார்பேட்டையில் இருக்கும் ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 7 வயது சிறுமியான பானு அங்கிருக்கும் ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

சிறுமி பானுவிடம் நடராஜன் அடிக்கடி பேசி வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வீட்டின் அருகே சிறுமி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நடராஜன், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து தனியாக அழைத்து சென்றுள்ளார். பின் அங்கு சிறுமிக்கு நடராஜன் பாலியல் தொல்லை கொடுக்கவே, என்னவென்று அறியாத சிறுமி கதறி அழுதுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம்கேட்டு வந்த அப்பகுதி மக்கள் நடராஜனின் செயலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தப்பி ஓட முயன்ற அவரை பிடித்து சரமாரியாக தாக்கி அடித்தனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

ரவுடியின் மனைவியை தகாத உறவுக்கு அழைத்த திமுக பிரமுகர்..! சரமாரியாக வெட்டிப்படுகொலை..!

பின் வண்ணாரப்பேட்டையில் இருக்கும் மகளிர் காவல்நிலையத்தில் நடராஜன் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமிக்கு நடராஜன் பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்மீது போக்சோவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடராஜனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.