தள்ளாடும் 60 வயது தாத்தா... 10 வயது சிறுமியிடம்.... சாக்லேட் வாங்கி கொடுத்து... "நைசா பேசி"... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்...!  

மதுரையில் உள்ள தல்லாகுளம் என்ற பகுதியில் வசித்து வந்த ஓர் சிறுமிக்கு தன் வீட்டின் அருகே வசித்து வந்த முதியவர் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்துள்ள சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை தல்லாக்குளம் பகுதியில் வசித்து வரும் இந்த சிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். இவளுக்கு 10 வயது ஆகிறது. தாய் தந்தை இல்லாமல் தன்னுடைய தாத்தா பாட்டி அரவணைப்பில் வசித்து வரும் இந்த சிறுமியிடம் பக்கத்து வீட்டிலிருந்த தாத்தா(60) கடந்த சில மாதங்களாக அன்பாக பேசி ஆசையாக பார்த்துக் கொண்டுள்ளார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிறுமியை அழைத்துக் கொண்டு சாக்லேட் வாங்கிக் கொடுப்பது வழக்கமாக வைத்துள்ளார் இந்த முதியவர். மேலும் யாரும் இல்லாத சமயத்தில் தன் வீட்டிற்கு அழைத்துச் சாக்லேட் கொடுப்பதும் சிறுமியிடம் பேசுவதும் இருந்துள்ளார். இந்த ஒரு தருணத்தில் 60 வயதான இந்த முதியவர், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில்  ஈடுபட்டுள்ளார்.

அது பாலியல் சீண்டல் என்பது கூட தெரியாத அந்த சிறுமி முதியவரின் பேச்சை கேட்டு யாரிடமும் எதைப்பற்றியும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஒரு விடுதியில் சேர்த்து சிறுமியை படிக்க வைக்க தாத்தா-பாட்டி முடிவு செய்து உள்ளனர். கு குழந்தையின் எதிர்காலம் கருதியும் நல்ல படிப்பு வழங்க வேண்டும் என்பதற்காக விடுதியில் சேர்க்க முயற்சி செய்த போது,  மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளாகி உள்ளார் என கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து சிறுமியிடம் பல விஷயங்களை மெதுவாக அமர்ந்து கேட்டதில், பல்வேறு உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். அதில் பக்கத்து வீட்டு தாத்தா எனக்கு அடிக்கடி சாக்லேட் வாங்கி கொடுப்பார்... பிறகு என்னிடம் இப்படி செய்யச் சொல்லுவார்... அப்படி கேட்பார் என ஏதும் அறியாமல் சொல்லியுள்ளார்அந்த சிறுமி. 

பிறகு இதுகுறித்து விவரம் அறிந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் முதியவரை சரமாரியாக அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளாடும் 60 வயதிலும் காம உணர்வில் சிறுமி என்றும் பார்க்காமல் பாலியல் சீண்டலில் இது போன்று எட்டுப்படும் சம்பவம் என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தண்டனை கொடுத்தாலும் மாற்றம் ஏற்படுவதாக இல்லை என்றே உணர வைக்கின்றது.