சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் 64 வயதான மூதாட்டியிடம் அதே பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் பாலியல் தொந்தரவுகொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

வீடு வீடாக சென்று வேலை செய்து வரும் இந்த மூதாட்டியிடம், இந்த ஐந்து சிறுவர்கள் கத்தி முனையில் மிரட்டல் விடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளனர். அப்போது, பதறிபோன மூதாட்டி சப்தமிடவே அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து அவரை மீட்டு உள்ளனர். 5 சிறுவர்களின் இந்த செயலால் காயம் அடைந்த அந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார்,17 வயதான சிறுவனை பிடித்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்து உள்ளனர்.
 
மேலும் மற்ற சிறுவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சின்ன வயதில், சிறுவர்கள் வழி தவறி சென்றுள்ளதை பார்க்கும் போது எங்கே செல்கிறது நம்ம சமூதாயம் என்ற கேள்வி பிறக்கிறது.

மேலும் இந்த சம்பவம் நடந்தது என்னவோ அங்குள்ள சமூதாய கூடத்தில் என்பது மேலும் மனதை வேதனை கொள்ளும் விஷயமாக பார்க்கப்படுகிறது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், இது போன்ற சம்பவம் அடிக்கடி அந்த பகுதி சமூதாய கூடத்தில் நடந்து வருவதாகவும் இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உள்ளனர்.