40 பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த வந்த வங்கி ஊழியரை வழக்கை திருச்சி போலீசாருக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தஞ்சாவூர் அருகேயுள்ள கள்ளப் பெரம்பூர் பகுதியை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் திருமணம் நடைபெற்றுள்ளது. முதலிரவு அறைக்கே இரவில் எட்வின் வரவில்லையாம். அவரது அறையிலேயே கிடந்தாராம். இது தொடர்கதையாகி உள்ளது. 

இந்நிலையில், எட்வின் அறையை மனைவி ஆராய்ந்துள்ளார். எட்வின் படுக்கையில் 15 செல்போன்கள் பரவி கிடந்தது. ஒவ்வொரு போனையும் எடுத்து படம் பார்ப்பதும், அடிக்கடி சிரித்து சிரித்து பேசுவதுமாக எட்வின் இரவில் பொழுதைக் கழிப்பது தெரியவந்தது. எட்வினின் செல்போன்களில் ஆபாச படங்கள், உடலுறவு படங்கள், அக்கம் பக்கத்தில் பெண்கள் கோலம் போடுவது, குளியல் அறைக்குள் நுழையும் காட்சி, சில பெண்கள் குளிக்கும் காட்சி, சில பெண்களின் நிர்வாண படங்கள் என ஏராளமான படங்கள் இருந்தது. இதை பார்த்ததும் எட்வின் மனைவி தாட்சர் அதிர்ந்து போனார். 

இதையும் படிங்க;- உல்லாசத்தின் போது காசு கேட்டதால் ஆத்திரத்தில் கொலை... கைதான சிறுவன் பகீர் வாக்குமூலம்..!

எட்வினுடன் பேசிய சில நம்பரில் தாட்சர் தொடர்பு கொண்டபோது அவற்றில் பல எண்கள் வங்கி வாடிக்கையாளர்கள் என தெரியவந்தது. இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ஆனாலும் எட்வினிடம் இந்த காம கொடூரங்கள் அடங்கவில்லை. இதனையடுத்து, வல்லம் அனைத்து மகளிர் போலீசில் தாட்சர் புகார் செய்தார். ஆனால், அந்த புகாரை போலீசார் வாங்க மறுத்தனர். இதன்பின், மதுரை உயர்நீதிமன்றத்தில் எட்வினின் ஆபாச படங்களை காட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி எட்வின் உட்பட 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இது தொடர்பாக போலீசாரிடம் அவர் பரபரப்பு தகவலை தெரிவித்தார். அதில், விராலிமலை வங்கியில் எட்வின் ஜெயக்குமார் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். வங்கிக்கு பணம் எடுக்க, செலுத்தி வரும் பெண்களில் அழகான பெண் வாடிக்கையாளர்களின் பாஸ் புத்தகத்தில் உள்ள செல்போன் எண்களை எட்வின் குறித்து வைத்து கொள்வார். பின்னர், இரவு வீட்டுக்கு வந்தபின் அந்த பெண்களின் செல்போன்களுக்கு ஆபாச தகவல்களை எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்புவார். இதில் பதில் வரும் எண்களுக்கு மீண்டும் வாட்ஸ்அப்பில் பெண்களை மயக்கும் வகையில் பதில் அனுப்புவாராம். இப்படி பல பெண்களை தனது வலையில் எட்வின் வீழ்த்தியுள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு மணப்பாறை வீடு என்பதால் மணப்பாறை மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு திருச்சி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது தாட்சர் தரப்பினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்காக அவர்கள் தஞ்சையில் இருந்து மணப்பாறைக்கு வந்து செல்ல வேண்டும் என்பதாலும், எட்வின் ஜெயக் குமார் உறவினர்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதாலும் அச்சத்தில் உள்ளனர்.