Asianet News TamilAsianet News Tamil

செத்தான்டா சேகரு..! அந்த படம் பார்த்தவங்களுக்கு வீடு தேடி வருகிறது சம்மன்..! பகீர் கிளப்பும் காவல்துறை..!

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்த்த சுமார் 3000 பேரிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மாவட்ட வாரியாக பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், முறையாக ஒவ்வொரு நபருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3000 names were in the list, says adgp
Author
Tamil Nadu, First Published Dec 8, 2019, 11:03 AM IST

சமீபத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு ஆபாச படம் பார்ப்பவர்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் உலகளவில் இந்தியாவில் தான் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அந்த எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. அதிலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவிலானோர் ஆபாச படம் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

3000 names were in the list, says adgp

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் சம்பந்தமான படங்களை தேடி, தரவிறக்கம் செய்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், அதை தமிழக காவல்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவலர்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

3000 names were in the list, says adgp

அதன்படி ஆபாச படம் பார்த்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரி ரவி தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்த்த சுமார் 3000 பேரிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மாவட்ட வாரியாக பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், முறையாக ஒவ்வொரு நபருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios