Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பீதியிலும் கிலுகிலுப்பு..! வதந்தி பரப்பிய வாலிபர்களை கம்பி எண்ண வைத்த காவல்துறை..!

கொரோனா தொடர்பாக ஏராளமான வதந்திகளும் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வதந்தி பரப்புவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

3 youth arrested for spreading fake news about corona virus
Author
Erode, First Published Mar 20, 2020, 1:57 PM IST

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து இதுவரையிலும் 206 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். இன்று காலையில் ஜெய்பூரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் மரணமடைந்ததை அடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன. மார்ச் 22 அன்று தேசிய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

3 youth arrested for spreading fake news about corona virus

இதனிடையே கொரோனா தொடர்பாக ஏராளமான வதந்திகளும் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வதந்தி பரப்புவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தக்கோடு பகுதியில் கொரோனா நோய் குறித்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சில போலி தகவல்கள் வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பரவி இருக்கிறது.  இதனால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் காவல்துறையின் கவனதிற்கு கொண்டு சென்ற நிலையில் உடனடியாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் உணவங்கள், கடைகள் மூடல்..! வணிகர் சங்கம் அறிவிப்பு..!

3 youth arrested for spreading fake news about corona virus

அதன்படி சித்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கமலேஷ், வரதராஜ் மற்றும் தருமபுரியைச் சேர்ந்த வாசுதேவன் ஆகியோர் கொரோனா குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் போலி தகவல்களை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. 3 பேரையும் அதிரடியாக கைது செய்த போலிசார் அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தென்மாவட்ட முக்கிய ரயில்கள் அதிரடி ரத்து..!

Follow Us:
Download App:
  • android
  • ios