திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜான்சன்(25). இவர்களின் வீட்டு அருகே ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 16 வயது சிறுமி வசித்து வருகிறார். ஜான்சனின் நண்பர்கள்  கார்த்திகேயன் (28) மற்றும் விஸ்வநாத் (18). இருவரும் ஜான்சனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில் ரேவதியுடன் பழகியுள்ளனர்.  நாளடைவில் சிறுமியுடன் நெருங்கிப் பழகிய 3 வாலிபர்களும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

தொடர்ந்து பலமுறை சிறுமியை மிரட்டிய அவர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக சிறுமி 6 மாத கர்ப்பமடைந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது தான் சிறுமி நடந்தவற்றை கூறியிருக்கிறார். செய்வதறியாது திகைத்த அவர்கள் உடனடியாக காவல் துறையில் புகார் அழித்தனர். அதனடிப்படையில் வழக்கு பதிந்த காவலர்கள் கார்த்திகேயனை அதிரடியாக கைது செய்தனர்.

வெறிச்சோடும் சென்னை ஏர்போர்ட்..! 11 நாட்களில் 90 விமானங்கள் ரத்து..!

விஸ்வநாதன் மற்றும் ஜான்சன் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் இருவரும் கைதாகினர். சிறையில் அடைக்கபட்டிருக்கும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.