வளசரவாக்கத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2 கணவரை போலீசார் கைது செய்தனர்.

வளசரவாக்கம் ஆறுமுகம் நாவலர் தெருவில் வசித்தவர் நிர்மலா. இவரது 15 வயது மகள் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நிர்மலாவின் கணவர் திருமணமான ஒரு வருடத்திலேயே பிரிந்து சென்று விட்டார். இதனால் நிர்மலா தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து மகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் நிர்மலாவுக்கும், பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பாலசுப்பிரமணியன் தனது மனைவியை பிரிந்து மகனுடன் வசித்து வந்தார். இதனால் நிர்மலாவும், பாலசுப்பிரமணியனும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வளசரவாக்கத்தில் குடித்தனம் நடத்தினர்.

இந்த நிலையில் சில நாட்களாக நிர்மலா வேலைக்கு சென்ற பிறகு அவரது மகளிடம் பாலசுப்பிரமணியன் தொடர்ந்து கண்ட இடத்தில் தொட்டும், கட்டிபிடித்தும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். இதுகுறித்து தாயிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதனால் நிர்மலா, பாலசுப்பிரமணியன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நிர்மலா அங்கிருந்து வெளியேறி மகளுடன் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் குடியேறினார்.

இதுகுறித்து நிர்மலா குழந்தைகள் நல அமைப்பினரிடம் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் வடபழனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பாலசுப்பிரமணியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.