தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த இளைஞர் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது இச்சம்பவம்  ஃபலக்னுமா   காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட  பகுதியில் நிகழ்ந்துள்ளது . இத்தற்கொலை குறித்து தெரிவித்துள்ள காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாஸ் ராவ்,   பருக் நகர் ஹரப்பாஹாட்டில்  வசிக்கும் முகம்மது யூசுப் என்பவரின் மகன் முஹம்மது ஷராப் (26) வயதாகும் இவர் பவுன்சராக இருந்து வந்துள்ளார் இந்நிலையில் முகமது ஷராப்புக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து வந்ததாக தெரிகிறது.

தனக்குப் பார்த்த பெண்கள் தன்னை பிடிக்கவில்லை என கூறியதால் மனம் உடைந்த நிலையில் இருந்த ஷராப் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது .  தனக்கு உரிய வயதாகியும் திருமணம் நடக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த அவர் நேற்று இரவு தனது அறைக்குள் சென்றார் பின்னர் கதலை உள் தாழிட்டி அவர்  நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை . இதனையடுத்து அவரை வெளியில் வரும்படி அவரது பெற்றோர்கள்  அழைத்தார்,  ஆனால் அறையிலிருந்த அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால்  பதற்றமடைந்த  பெற்றோர்  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி  காத்திருந்தது.

அப்போது அவர் மின்விசிறியில் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலாமக தொங்கினார்.  இந்நிலையில் அவரது பெற்றோர்களிடத்தில் போலீசார் விசாரித்ததில் சில காலமாக தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற மன அழுத்தத்தில் ஷராப் இருந்ததாக  தெரிவித்தனர் .  பின்னர் அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக  அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு  வேறு காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில்  போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர்.