90 வயது மூதாட்யை பலாத்காரம் செய்ய முயன்ற 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் மைதீன்(20). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அங்கு தனியாக இருந்த 90 வயதான மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மூதாட்டி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

இதையடுத்து, மைதீன் அங்கிருந்து தப்பி சென்றார். இச்சம்பவம் குறித்து முதாட்டி கொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பேருந்து நிலையம் அருகே இருந்த மைதீனை கைது செய்தனர். பின்னர், பொள்ளாச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.