16 வயது சிறுவனுடன் உறவில் இருந்த 19 வயது மகளை தட்டிக்கேட்ட வளர்ப்பு தந்தையை அந்த பெண், ஆணுறுப்பை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  கடந்த சில நாட்களுக்கு முன்னர்  மும்பை மாஹிம் கடற்கரையில் அனாதையாக சூட்கேஸ் ஒன்று கிடந்தது அதில் இருந்து ரத்தம் வழிய மனித உடல் உறுப்புகள் தென்பட்டது .  இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர் .  உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சூட்கேசை கைப்பற்றி அதைத் திறந்தபோது மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.  ஒரு ஆணின் உடல்  துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தது . 

 

அத்துடன் அந்த ஆணின் மர்ம உறுப்பு ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது .  மேலும் அதில்  ஒரு சட்டை இருந்தது அந்த சட்டையில் உள்ள  டெய்லர் கடையில் பெயரை அடையாளமாக வைத்து  கொலையானவரின் விலாசத்தை  கண்டுபிடித்தனர் .  இறந்த நபர் பெனட் ரிப்பளோ  என்பது தெரியவந்தது . பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது வீடு பூட்டி இருந்தது  அவரது வளர்ப்பு மகள் 19 வயதான ஆரத்யா தனியாக வசித்து வந்ததும்,  சில தினங்களுக்கு முன்  அவர் தலைமறைவானதும் தெரிய வந்தது   இந்நிலையில் ஆரத்யா மற்றும்  அவர்  பழகி வந்த 16 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர் .  இது குறித்து விசாரித்ததில்  16 வயது சிறுவனுடன் பழகுவதும் அடிக்கடி  உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததையும் பெனட் ரிப்பளோ  கண்டித்ததுடன்.  தன்னுடன் உறவுக்கு அழைத்து  ஆரத்யாவை அடிக்கடி தொல்லை  கொடுத்து  வந்துள்ளார். 

இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த  ஆரத்யா ஆண் நண்பரான சிறுவனுடன் இணைந்து,  வளர்ப்பு தந்தையான ரிப்பளோவை கத்தியால் குத்திக் கொலை செய்ததுடன் அவரது மர்ம உறுப்பை  அறுத்ததும், உடலை துண்டு துண்டாக வெட்டியும் சூட்கேசில் அடைத்துவைத்து அதை மூன்று நாட்கள் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்து பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் ஆட்டோவில் கொண்டு சென்று  கடற்கரையில் வீசியதாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது . இந்நிலையில் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து  வருகின்றனர்.