வயிறு வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற 17 வயது மாணவிக்கு, பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கர்ப்பத்திற்கு காரணம் படித்த மாணவன் என தெரிகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருத்தி வயிற்று வலி சிகிச்சைக்காக சென்றுள்ளார், அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், அது வயிறு வலி இல்லை, பிரசவ வலி என சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து நடந்த சிகிச்சையை அடுத்து, சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் விஷயம் வெளிப்பட்டது.

சிறுமி 11ம் வகுப்பு படிக்கும் போது, கூட படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் காதலித்து உள்ளனர். ஆனால் அந்த மாணவன், 12-ம் வகுப்பு படிக்கும்போதே பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு, பிரைவேட் காட்டன் மில்லுக்கு வேலைக்கு போய்விட்டான். பள்ளிப்படிப்பை நிறுத்திய அவன், அந்த பெண்ணோடு ஊர் சுற்றியுள்ளான், இருவரும் தனிமையிலும் இருந்துள்ளனர். இதனால்கர்ப்பம் அடைந்து இருக்கிறாள் மாணவி. ஆனால், இதை பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.

வழக்கம் போல பள்ளிக்கு சென்று வந்துள்ளார். திடீரென வயிற்று வலி ஏற்படவே பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விவரங்களை உறுதி செய்த போலீசார், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 17 வயது சிறுவனை கைது செய்து பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சிறுமியால், குழந்தையை பாதுகாக்க முடியாது என்ற காரணத்தினால், பெண் குழந்தையை காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் சிறுமிக்கு உரிய வயது வந்த பின்னர் இந்த குழந்தை அவளிடமே ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர்.