பள்ளிக்குச் சென்ற 10 வயது சிறுமியை பின்தொடர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் புதருக்குள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ,  அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள்  பரவலாக நடந்து வருவருது நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது. 

இதை தடுக்க சமூக அமைப்புகளும் ,  காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும் பாலியல்  கொடுமைகள் தீர்ந்தபாடில்லை .  இந்நிலையில் இமாச்சலப் பிரதேசம் குளு மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனால் பாதிக்கப்பட்டுள்ளார் .  நேற்றைய முன் தினம் அச்சிறுமி பள்ளிக்கூடம் நடந்து சென்று கொண்டிருந்தார், அப்போது  ஏற்கனவே  நீண்ட நாட்களாக சிறுமியை நோட்டமிட்டு வந்த  10 வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் அன்று அச்சிறுமியை பின்தொடர்ந்து சென்று, அவரிடம்  அன்பாக பேச்சு கொடுத்ததுடன், சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.  பின்னர் இதுகுறித்த அச்சிறுமி பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து உள்ளூர்  காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் ,  சிறார்களை பாலியல் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை பிடித்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில்  உனா என்ற இடத்தில் உள்ள  சிறார் காப்பகத்தில் சிறுவனை அடைத்தனர்.   பால்மனம் மாறாத 10 வயது சிறுமியை 14 வயது சிறுவன் மூர்க்கத்தனமாக வல்லுறவு செய்துள்ள சிறை சென்றுள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.