ஐதராபாத்தில் பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்த குற்றவாளிகள் 4 பேரை என்கவுண்டர் செய்திருந்த நிலையில், கேரளாவில் வீடு புகுந்து பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கேரள மாநிலம் கோட்டயம், காஞ்சிரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பெற்றோர் வெளியில் சென்றுவிட்டதால் வீட்டில் தனியாக மாணவி இருந்துள்ளார். இந்த நேரத்தில் மாணவியின் சகோதரரின் நண்பர் என்று கூறிக்கொண்டு இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். 

இதையும் படிங்க;- கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கணவனை கொலை செய்த கொடூர மனைவி..!

அப்போது, அந்த இளைஞர் ரொம்ப தாகமாக இருக்கு கொஞ்சம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். மாணவி, தண்ணீர் எடுக்க சமையல் அறைக்கு சென்றார். அந்த நேரத்தில் இளைஞர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர், மாணவியை தாக்கி கட்டிலில் போட்டு பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து, பள்ளி மாணவியின் அலறம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். 

இதையும் படிங்க;- கணவரை கொன்ற இடத்தில் என்னையும் கொன்றுவிடுங்கள்... கதறி அழுது துடிக்கும் கர்ப்பிணி மனைவி..!

அக்கம் பக்கத்தினர் வருவதை கண்ட இளைஞர் வீட்டில் இருந்து தப்பியோடினார். இதையடுத்து, மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உடனே பெற்றோர் காஞ்சிரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை பலாத்காரம் செய்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.