தக்காளி - 4, 

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, 

பச்சை மிளகாய் - 3, 

காய்ந்த மிளகாய் -  1, 

கடுகு - 1/4 டீஸ்பூன், 

உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன், 

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது, 

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, 

உப்பு - தேவையான அளவு, 

துருவிய தேங்காய் - 1/2 மூடி.

எப்படிச் செய்வது? 

தக்காளியை அப்படியே முழுதாக வேக வைக்கவும். வெந்ததும் தனியாக எடுத்து தோல் நீக்கி, சதைப் பகுதியை நைசாக பிழிந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்க்கவும். அத்துடன் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போடவும். நன்றாக வதக்கவும். 

தக்காளி சதையையும் தக்காளி வேக வைத்த நீரையும் சேர்த்து பிசறி அதில் சேர்த்து கொதிக்க விடவும். கரைசல் சிறிது கெட்டியானதும் தேங்காய்த் துருவல் தூவி உப்பு, கொத்தமல்லி இலையை சேர்த்துப் பரிமாறவும். ருசியான தக்காளி கிச்சடி தயார்