யுவனின் இசையை ரசிக்காத இளைஞர்கள் தமிழகத்தில் அறவே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய இசையின் மூலம் தனக்கென மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உடையவர். 125 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா தற்பொழுது "பியார் பிரேம காதல்" என்னும் திரைப்படத்திற்கு இசையமைத்து தயாரித்துள்ளார். இவருடைய இசைக்காக மட்டுமே வெற்றிப்பெற்ற படங்களின் எண்ணிக்கை அதிகம்.

இவ்வாறு, இசையில் தன்னுடைய தந்தையைத் தொடர்ந்து தனக்கென மிகப்பெரும் சாம்ராஜியத்தை உருவாக்கிய யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய அடுத்த அவதாரத்தைப் பற்றி சமீபத்தில் கூறியுள்ளார். 

அது என்னவென்றால், திரைப்படம் இயக்குவதற்கானப் பணிகளில் உள்ளதாகவும், அந்த  திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருக்குமென்று கூறியுள்ளார். மேலும், இயக்குனர் விஷால் பரத்வாஜ் தான் எனக்கு மிகப்பெரும் இன்ஷ்பிரேசன்  என்றும், இயக்குனர் டாம் டைக்வரின் "பெர்சோனா" மாதிரியான திரைப்படங்களை இயக்குவதற்கு தான் எனக்கு விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.  

மிக விரைவில் ம்யூசிக் ஜாம்பவானை இயக்குனர் அவதாரத்தில் பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரத்தினர் கூறி வருகிறார்கள்.