பிரபல பாப் இசை பாடகியும், இளம் நடிகையுமான செலினா கோம்ஸ் இந்த வருடத்திற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் முறையாக பிரபல ஹாலிவுட் நடிகர் பில் பெர்ரியுடன் கலந்து கொண்டு, அவரையே திருமணம் செய்ய உள்ளதாகல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான 'கேன்ஸ்' திரைப்பட திருவிழா தற்போது, பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, ரெட் கார்ப்பெட்டில் விதவிதமான உடை அணிந்து கலக்கி வருகிறார்கள். குறிப்பாக, நேற்று ஐஸ்வர்யா ராய் அணிந்த வித்தியாசமான உடை ரசிகர்களிடம் பல்வேறு விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் முதல் முறையாக 'கேன்ஸ்' திரைப்பட விழாவில்,  26 வயதாகும் பிரபல பாப் பாடகியும்.  பாடல் எழுத்தாளரும், நடிகையுமான செலினா கோம்ஸ், ஹாலிவுட் நடிகர் பில் பெர்ரியுடன் கலந்து கொண்டு சிவப்பு கம்பள விரிப்பில் ஒய்யார நடை போட்டார். 

மேலும் 68 வயதாகும், ஹாலிவுட்டில் நடிகர் பில் பெர்ரியை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். சிலர் காமெடி செய்யாதீர்கள் என்றும்,  சில ரசிகர்கள் செலினா கோம்ஸ் பதிவு  கோபத்தை வரை வைக்கிறது என்றும்கூறி வருகிறார்கள். 

 

 

தற்போது செலினா நடிப்பில், 'dead dont die'என்கிற ஹாலிவுட் படம் உருவாகி வருகிறது. விரைவில் பாப் பாடல் ஒன்றும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.