நடிகை தன்னை விட பத்து வயது குறைந்த இளம் ஹீரோ ஒருவருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்புப் பயிற்சி கொடுத்து அவர் மீது அதிக அக்கறை காட்டி வருவதால், அவர் ஏற்கனவே காதலித்து வந்த நடிகர் ஜெய்யின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

ஏமாலி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சாம் ஜோன்ஸ் அந்த படத்தில் நன்றாக நடிக்க தெரிந்த இளம் நாயகன்  என்ற பெயர்  எடுத்தார். அடுத்து தர்மபிரபு, லிசா3டி படங்களின் நடித்துள்ளார். லிசாவில் அஞ்சலிக்கு ஜோடியாகவும், தர்மபிரபுவில் ஜனனி ஐயருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.  

தனது திரையுலக அனுபவம் குறித்து மனம் திறந்து பேசிய அவர்,”லயோலா கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்த போதே சினிமா ஆர்வம் என்னை படிக்க விடாமல் செய்தது. எப்போதும் சினிமா பற்றிய சிந்தனையுடனே கல்லூரி படிப்பை முடித்தேன். ’ஏமாலி’  படத்தின் மூலம்  சமுத்திரக்கனியுடன் இணைந்து நடிக்கும் வாய்பை பெற்றேன்.

முதல் படத்திலேயே பல தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இப்போது லிசாவில் பிரம்மானந்தத்துக்கு மகனாக நடித்துள்ளேன்.பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் இளம் கல்லூரி ஜோடியாக நானும் அஞ்சலியும் வருகிறோம். அவர் எனக்கு நடிப்பில் சீனியர் என்பதால் நிறைய சொல்லிக்கொடுத்தார். நடிப்பதற்கு பயிற்சி கொடுத்தார். என் மேல் மிகவும் அக்கறை செலுத்தினார். தெலுங்கிலும் நானே குரல் கொடுத்துள்ளேன். ’தர்மபிரபு’வில் எமலோகத்தில் யோகி பாபுவும், பூலோகத்தில் நானும் கதாநாயகர்களாக இருப்போம். .தர்மபிரபு’ ஜீன் மாதம் திரைக்கு வர உள்ளது வித்தியாசமான நகைச்சுவை திரைப்படம் அது.

நான் சின்ன பையனாக இருப்பதால் இளம் கதாநாயகன் வாய்ப்புகள் வருகின்றன. அடுத்தது  இரண்டு முன்னணி இயக்குனர்களுடன்  நல்ல கதையம்சம் கொண்ட படத்தில்  நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.விஜய் சேதுபதி போல் அனைத்துவித கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். சிவகார்த்திகேயன் போல் ரசிகர்களுக்கு நல்ல எண்டெர்டெய்னராகவும் விளங்கவேண்டும் என்பதே என் ஆசை” என்கிறார் சாம் ஜோன்ஸ்.

மத்ததெல்லாம் ஓ.கே. அஞ்சலி மேட்டர்ல ஜெய்க்கு என்ன பதில் வச்சிருக்கீங்க பாஸ்?