பல மாதங்களாக சுற்றி வந்த வதந்திக்கு விவாகரத்தான நடிகையுடன் ஊர் சுற்றுவது உண்மைதான் எனக் கூறி முற்றிப்புள்ளி வைத்திருக்கிறார் இளம் அந்த இளம் ஹீரோ.

தெலுங்கு நடிகரான ஹர்சவர்தன் ரானே கடந்த சில மாதங்களாக பாலிவுட் கவர்ச்சி நடிகை கிம் ஷர்மாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. அவர்கள் இருவரும் பல இடங்களுக்கு ஜோடியாக சுற்றுவதும், இரவு நேர பார்ட்டிகளில் நெருக்கமாக இருப்பதாகவும் பாலிவுட்டில் பலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. 

அது உண்மைதான் என ஊரறிய கூறியிருக்கிறார்கள் அவர்கள் இருவரும். ‘’கிம் ஷர்மாவுடன் ஊர் சுற்றுவதும், நட்பில் இருப்பதும் உண்மைதான். எனது தனிப்பட்ட வாழ்கையில் கிம் முக்கியமான நபராகி விட்டார்’’ என பளிச்சென வெட்டவெளிச்சமாக்கி விட்டார் ஹர்சவர்தன் ரானே. ஹர்சவர்தன் தெலுங்கு சினிமாவில் 2010 தகிட தகிட படத்தில் காலடி எடுத்து வைத்தார். அடுத்து அவுனு, ஃபிடா அனாமிகா ஆகிய படங்களில் நடித்தவர். சமீபத்தில் அவர் நடித்த கவச்சம் வெளியானது. 2016ல் பாலிவுட்டில் சனம் டெரிகாசம் படத்தில் காலடி எடுத்து வைத்தார். 

கவர்ச்சி நடிகையான கிம் ஷர்மா தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமானவர்தான். தெலுங்கு சினிமாவில் காட்கம், மகதீரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2010ல் கென்யாவை சேர்ந்த தொழிலதிபர் அலி புஞ்சானி என்பவதை திருமணம் செய்து கொண்டார். இல்லற வாழ்கை கசந்ததால் 2017ல் விவாகரத்து பெற்று விட்டார் கிம் ஷர்மா. இப்போது கிம் ஷர்மாவுக்கு ஹர்சவர்தனின் அரவணைப்பு ஆனந்தத்தை தந்திருக்கிறது. ஹிம் சர்மாவுக்கு 38 வயது. ஹர்சவர்தனுக்கு 35. சும்மா 3 வயசுதாங்க வித்தியாசம்...