அஜித் நயன்தாரா நடித்து வெளிவர உள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித் உடன் எப்போதும் ஒரு பைக் இருப்பது போன்ற காட்சி உள்ளது. அந்த பைக் யாருடையது என்ற கேள்வி கட்டாயம் வர தானே  செய்யும்...

ஆமாம்...இந்த பைக்... அந்த படத்தின் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் ராகுலின் பைக் தான் தல அஜித், விசுவாசம் படத்தில் பயன்படுத்தக் கூடிய பைக்.

இது பற்றி ராகுல் பிரபல தமிழ் இதழுக்கு தெரிவிக்கும் போது, "ஆமாங்க..அந்த பைக் என்னுடையது தான்.. என்னுடைய முதல் மாத சம்பளத்தில் அந்த பைக் வாங்கினேன்...எனக்கு மிகவும் பிடித்த பைக் அது.. இருந்தாலும் ஒரு கட்டத்தில் பண நெருக்கடி இருந்தது. அப்போது அந்த பைக்கை ஒருவருக்கு விற்று விட்டேன்.. என்னுடைய அதிர்ஷ்டம் நான் மீண்டும் பணம் சம்பாதித்த உடன் அந்த பைக்கை நான் யாரிடம் விற்றேனோ அவரிடம்  இருந்து பெற்றுக்கொண்டேன்.

இந்நிலையில் தான் விசுவாசம் படத்தில் அஜித் சாருக்கு ஒரு பைக் தேவைப்பட்டது. என்னிடமே ஒரு பைக் இருக்கிறது என சொன்னேன். இப்போது அந்த பைக் அவருக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கப்பட்டு மிகவும் பிரமாண்டமாக உள்ளது.

இந்த விஷயம் தெரிந்த பலரும் என்னை போனில் தொடர்பு கொண்டு அந்த பைக்கை வாங்க போட்டி போடுகிறார்கள். அதுவும் மிக உயரிய விலைக்கு. இருந்த போதிலும், அந்த பைக்கை யாருக்கும் கொடுக்க முடியாது" என்று தெரிவித்து உள்ளார்.