ஆஸ்திரேலியாவில் தமிழ் கடவுள் முருகனை கண்டுபிடிச்சிட்டேன்! யோகி பாபு வெளியிட்ட வீடியோ!
தமிழ் சினிமாவில் தற்போது அதிகமான திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பால் கலக்கி வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவருக்கு நடிகை நயன்தாரா உள்பட பல பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர்.

விஜய், அஜித் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி யோகிபாபு, ஒருசில படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கே.எஸ்.அதியமான இயக்கி வரும் 'ஏஞ்சல்' படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள யோகிபாபு தற்போது ஆஸ்திரேலிய சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்தவாறு, யோகி பாபு வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில்... 'ஏஞ்சல்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா வந்துள்ளேன். இங்கு வந்து பத்து நாட்கள் ஆகியும் இப்போதுதான் இங்கு ஒரு முருகன் கோவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். உலகின் எந்த இடத்தில் தமிழர்கள் இருந்தாலும் அங்கெல்லாம் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானும் இருப்பார் என்பதை புரிந்து கொண்டோம். முருகர் அனைவரையும் காப்பாற்றுவார் என மிகவும் சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.