கோலிவுட் திரையுலகில் 2018 ஆண்டில் மட்டும் 20 திற்கும் அதிகமான படங்களில் நடித்து, அதிக ஹிட் படங்களில் நடித்த முன்னணி காமெடியன் என்ற பெயரை எடுத்துள்ளார் யோகிபாபு.

இதனால் இவரை தேடி தற்போது ஹீரோ வாய்ப்புகளும் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் முழுமையான ஹீரோ கதையம்சம் கொண்ட வேடத்தில் நடிக்க மாட்டேன் என அடம்பிடிக்கும் யோகி பாபு, கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் காமெடி வேடத்தில் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார்.

இதன் விளைவாக, தற்போது 'தர்மபிரபு', என்கிற படத்தில் நடித்து வருகிறார் எமலோகத்தில் நடைபெறும் ஸ்வாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த படத்தில் ராதாரவி எமனாகவும், எமனின் மகனாக யோகிபாபுவும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இதே படத்தில் கவர்ச்சி நடிகை மேக்னா நாயுடு இணைத்துள்ளார். இவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

யோகிபாபுவுடன் மேக்னா நாயுடு ஆடும் நடனக்காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளதாம். யோகி பாபுவுக்கு சில நிமிடம் இவர் ஜோடியாகவும் நடிக்கிறாராம். மேலும் இந்த படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.