நடிகர் விஷ்ணு விஷால், முதல்  மனைவி ரஜினியை விவாகரத்து செய்த பின், தற்போது பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவைகாதலித்து வருகிறார்.இந்த வருட காதலர் தினத்தில், இவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக கொண்டாடினர். அப்போது இவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இதையும்  படிங்க: வல்லரசுகளாலும் முடியாது... நிச்சயம் இந்தியா தப்பிக்கும்... ஐ.நாவின் அதிரடி கணிப்பு....!

மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் சந்தித்து தங்களுடைய காதலை வளர்த்து வருகிறார்கள். குறிப்பாக அடிக்கடி இருவரும் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: அமலா பால் அழகை வர்ணித்த “மாஸ்டர்” பிரபலம்... வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு...!

ஏற்கனவே 21 நாட்கள் மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.விஷ்ணு விஷால் சென்னையிலும், ஜூவாலா ஐதராபாத்திலும் தனிமையில் தவிக்கின்றனர். இந்த சமயத்தில் விஷ்ணு விஷாலை   மிஸ் செய்வதாக ட்வீட் போட்டிருந்தார். அதுவும் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!

முதலில் தங்களது காதல் விவகாரத்தை மறைத்து வந்த இருவரும் தற்போது அதனை ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ள ஜூவாலா, நாங்க டேட்டிங் செய்து வருவது உண்மை தான். ஏற்கனவே சொன்னது போல, இதில் மறைக்க ஒன்றுமில்லை. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளோம். தேதி முடிவானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று ஒரு போடு போட்டுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.