இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற  படத்தில் நடித்ததன் மூலம்  பிரபலமான யாஷிகா ஆனந்த், தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  அனைவரைது கவனத்தையும் ஈர்த்தது.
 
தற்போது நடிகை யாஷிகா யோகி பாபுவுடன் இணைந்து ஸோம்பி என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இன்ஸ்டகிராம் பக்கத்தில் தொடர்ந்து படங்களைப் பதிவேற்றிவரும் யாஷிகா சில தினங்களுக்கு முன் வெளியிட்ட புகைப்படத்தில் சற்று கவர்ச்சியாகத் தோன்றியிருந்தார். 

யாஷிகாவின் பெரும்பாலான புகைப்படங்கள் இவ்வாறு இருப்பினும் இந்தப் படம் சர்ச்சையைக் கிளப்பியிருப்பதற்குக் காரணம் இதைகுறை உடையுடன் அவர் பிள்ளையார் சிலையின் முன் நிற்பதே ஆகும். சாமி சிலை முன் இவ்வாறு தோற்றமளிக்கலாமா என்ற விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.

அந்த புகைப்படத்தை நீக்க  வேண்டும் என சிலர்  சொல்லி, சிலர் மோசமான வார்த்தைகளால் பின்னூட்டம் இட்டு வருகின்றனர். ஆனாலும்  குறிப்பிட்ட படத்தை யாஷிகா நீக்கவில்லை.