வெறும் ஐந்தே தமிழ்ப்படங்களில், அதுவும் படுசுமாரான படங்களில் நடித்திருந்தாலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பெரும்பிரபலம் அடைந்திருப்பவர் யாஷிகா ஆனந்த்.

மி டு’விவகாரம் மெல்ல ஓய ஆரம்பித்த வேளையில் அப்பிடியெல்லாம் விட்டுறமுடியாதுங்க என்று களம் இறங்கியிருக்கிறார் யாஷிகா.  நான் நடிப்பு வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தபோது ஒரு தமிழ்ப்பட இயக்குநர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். இன்று சினிமாவில் நடிக்க முயற்சிக்கும் எல்லோருக்கும் இந்த தொல்லைகள் இருக்கவே செய்கின்றன. அதனால் மி டு’ இயக்கம் இன்றைக்கு மிக அவசியமான ஒன்றுதான் என்கிறார் யாஷிகா.

ஆனால் போகிறபோக்கில் புகார் சொல்லிவிட்டுப்போகிற சில நடிகைகளைப் போல் யாஷிகாவும் அந்த இயக்குநர் பெயரை வெளியிடவில்லை. ‘கவலை வேண்டாம்’,’துருவங்கள் பதினாறு’,பாடம்’, மணியார் குடும்பம்’, இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ ஆகிய ஐந்தே படங்களில் மட்டும் யாஷிகா நடித்திருப்பதால் கொஞ்சம் மெனக்கெட்டால் அந்த டைரக்டர் பெயரைக்கண்டுபிடித்துவிடலாம்.