தெலுங்கு திரையுலகில் தன்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் என்று இளம் நடிகை யாமினி பாஸ்கர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு வெளியான கீச்சகா எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் யாமினி பாஸ்கர். இவர் தமிழிலும் முன்னோடி எனும் படத்தில் நடித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றே மூன்று படங்களில் மட்டுமே யாமினி நடித்துள்ளார். ஆனால் இந்த மூன்று படங்களுமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான திரைப்படம்.  இந்த நிலையில் யாமினி நடிப்பில் நர்டன்சாலா எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக யாமினி நடித்துள்ளார்.

 

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. நர்டன்சாலா திரைப்படத்தின் மூலம் யாமினி பாஸ்கர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவது உறுதி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நர்டன்சாலா வெளியாவதை முன்னிட்டு யாமினி பாஸ்கர் தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவரிடம் மூன்று ஆண்டுகளில் மூன்று படங்களில் மட்டும் நடித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தான் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்தார். இதனால் படங்களை தேர்வு செய்வதில் பொறுமை காப்பதாகவும், எனவே தான் ஒரு வருடத்திற்கு ஒரு படம் என்று தான் நடிப்பதாகவும் யாமினி பாஸ்கர் தெரிவித்தார். 

தெலுங்கு திரையுலகில் நடிகைகளை வாய்ப்பு கொடுப்பதாக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து உங்களது கருத்து என்ன என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அது உண்மை தான் வாய்ப்பு வேண்டும் என்றால் நடிகைகளிடம் இருந்து சிலர் சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள் என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் யாமினி கூறினார். உங்களிடம் யாரேனும் வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்துள்ளார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஆமாம் என்னையும் பல முறை பலரும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் என்று யாமினி தெரிவித்தார். ஏற்கனவே தெலுங்கு திரையுலகில் ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளே அடங்காத நிலையில் மேலும் ஒரு நடிகை தெலுங்கு திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.