பணம் பெற்று கண்டுக்கொண்டேன்... 'யாகம்' பட விழாவில் பொன்வண்ணன் நெகிழ்ச்சி...(வீடியோ)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் நரசிம்மா இயக்கியுள்ள 'யாகம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த படத்தின் மூலம் 90 களில், முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஜெயப்பிரதா, நடிகர் நெப்போலியனுக்கு ஜோடியாக ரீ என்ட்ரி கொடுக்கிறார். மேலும் கதாநாயகனாக அறிமுக நடிகர் ஆகாஷ் குமார் மற்றும் நாயகியாக மிஸ்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் நாசர், இந்த படம் மிக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம் என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய நடிகர் பொன்வண்ணன் படக்குழுவினர் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, இந்த படத்தில் தான் பணியாற்றியதன் மூலம் பணம் பெற்றுக்கொண்டு பல தொழில்நுட்பங்களை பற்றி கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.