பாராளுமன்றத்துக்குச் சென்றிருக்கும் கனிமொழி உட்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் சொத்து மட்டுமே சேர்ப்பார்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுத்தாளரும் இயக்குநருமான லீனா மணிமேகலை  பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அது தொடர்பாக அவர் பல மிரட்டல்களை சந்தித்து வருவதாகத் தெரிகிறது.

இம்முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கை கனிமொழி தொடங்கி தமிழச்சி தங்கப்பாண்டியன், பா.ம.க.வின் ரவிக்குமார்,ஜோதிமணி, சு.வெங்கடேசன் ஆகிய 5 எழுத்தாளர்கள் எம்பிக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்த சர்ச்சை நாயகி லீனா மணிமேகலை,...கனிமொழி சக கவிஞர் தான். அவங்க நாடாளுமன்றத்துக்குப் போய் சொத்து சேர்த்தத தவிர நாட்டுக்கு ஒரு நல்லதும் செய்யல. இடையில இலக்கியத்துக்கு ஏதாவது புல்லு புடுங்கிப் போட்டாங்களான்னு கேக்கறதெல்லாம் அபத்தம். எழுத்தாளர்கள் நாடாளப் போயிட்டாங்க, இனி நாடு சுபிட்சமாயிடும்னு பினாத்தறவங்க சகாயம் எதிர்பார்க்கிறவங்க. அதுல அலட்டிக்கிறதுக்கு ஒன்னும் இல்லை. கலை அதிகாரத்துக்கு எதிரானது - இதை கண்ணாடி பார்த்து நானே தினமும் பத்து தடவை சொல்லிட்டு மூச்சு விட்டுக்கிறேன்’ என்று காரசாரமாகப் பதிவிட்டிருந்தார்.

அவரது அந்தப்பதிவு பலத்த சர்ச்சைகளுக்குள்ளானது.அதற்கு வந்த கமெண்டுகளில் பலர் அவரை சரமாரியாக வசை பாடினர். அந்த கமெண்டுகளுக்கு பதில் அளித்த அவர்,...பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி பற்றிய குறிப்புடன், நாடாளப் போயிருக்கும் எழுத்தாளர்களால் பெரிய மாற்றங்கள் நடந்துவிடாது என்ற விமர்சனத்துடன் கூடிய எனது ட்வீட்டுக்கு, திமுக கட்சிக்காரர்கள் “....மகளேயில் தொடங்கி .........யா வரை” கீச்சிக் கொண்டிருக்கிறார்கள். கீச்சாளர்கள் பரொஃபைல் பிக்சரில் பெரியார், சேகுவேரா, அண்ணா படங்கள் வேறு.தமிழ் வாழ்க, அண்ணா வாழ்க, பெரியார் வாழ்க. 🙏🏽 என்று திரும்பத் திரும்ப வம்பு வளர்த்துக்கொண்டிருக்கிறார் லீனா.

கடந்த அக்டோபரில் லீனா வைத்த ‘மிடு’ குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் சுசி கணேசன் நேற்றுதான் சைதாப்பேட்டை மெட்ரோபாலிடன் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.