பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதனால் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் கடுமையாகிக் கொண்டே போகிறது. இதனால் முன்பை விட, பிக்பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம்,  பிக்பாஸ் போட்டியாளர்கள் பலருக்கும் சவாலாக இருந்த டேனி எலிமினேட் செய்யப்பட்டார். ஏற்க்கனவே பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதை ஈர்த்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பல ரசிகர்களை கவர்ந்து விட்டார் எனலாம்.

இந்நிலையில் அவர் வெளியே வந்ததற்கு காரணம் டாஸ்கில் அதிக கவனம் செலுத்தாததால் மக்களின் ஆதரவு குறைந்து குறைவான வாக்குகள் பெற்றது தான் என கூறப்பட்டது. 

ஆனால் இதையும் தாண்டிய காரணம் உள்ளது என கூறியுள்ளார் டேனி. இது குறித்து அவர் கூறுகையில்... தன் அம்மாவும் காதலியும் உள்ளே வந்து பார்த்துவிட்டு சென்ற பிறகு இவரால் டாஸ்கில் கவனம் செலுத்த முடியவில்லையாம்.

மேலும் சில நாட்களாக மஹத்துடன் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு ஆர்வம் குறைந்து பிக்பாஸ் போட்டி மீது பிடிப்பு இல்லாமல் போனதாம். எனவே தான் பிக்பாஸ் வீட்டை விட்டு தான் வெளியேறியதாக கூறியுள்ளார். அதே போல் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பரிசு தனக்கு வேண்டாம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் 50 லட்சம் ரசிகர்களின் அன்பே போதுமானது என கூறியுள்ளார்.

வெளியிடங்களுக்கு செல்லும் போது ரசிகர்கள் அவரிடம், நீங்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே நடிக்கவில்லை, மிகவும் எதார்த்தமான மனிதராக நடந்து கொண்டீர்கள் என கூறியுள்ளார்.  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொண்ட இவர், விரைவில் நடக்கவிருக்கும் திருமண வரவேற்புக்கு ரசிகர்களையும் அழைத்துள்ளார்.