பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு 18 வயது இருந்தபோது, வைரமுத்து வீட்டுக்கு சென்றிருந்தேன்…அப்போது திடீர் என அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.   

இதனையடுத்து, ஒரு முறை சுவிட்சர்லாந்தில் பாட்டுக் கச்சேரிக்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்டார்கள். நானும் என் அம்மாவும் மட்டும்தான் இருந்தோம்.. அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வந்து, கவிஞர் வைரமுத்த உங்களுக்காக ஹோட்டல் ரூமில் வெயிட் பண்ணுகிறார் என தெரிவித்தார். நான் அப்போதே அவர் முகத்திரையைக் கிழித்திருப்பேன்.. அவர் மீது திரையுலகம் வைத்திருந்த மரியாதைக்காக விட்டுவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

அவரை பற்றி  0.2 சதவீதமே பேசி உள்ளேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் வைரமுத்துவின் பல லீலைகள் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை சொல்வதால் திரைப்படங்களில்  பாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் கவலையில்லை  என சின்மயி ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வைரமுத்துவிற்கு எதிராக பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.  மேலும் சின்மயி கடந்த சில வருடங்களாக வைரமுத்துவிற்கு வாழ்த்து சொல்லுவது, திருமணத்தின்போது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதும் என் என பலரும் சின்மயிடம் கேள்வி எழுப்பி வருவதால் அதுகுறித்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அதில், ஆமாம் நான் எப்போதும் புதிய படம் வெளியானால் நான் யாருடன் பாடினேனோ அதை குறிப்பிடுவேன். அதனால் குறிப்பிட்டேன். ஆம் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். மக்கள் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள் அதனால் தெரிவித்தேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து  சின்மயி 2014ல் தனது திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்துள்ளார். இதில் வைரமுத்துவின் காலில் விழுந்து முகத்தை வைத்து சின்மயி மரியாதை செய்யும் வீடியோவை பதிவிட்டு என் அவரது காலில் விழ வேண்டும் என கேள்வி எழுப்பியதற்கு விளக்கம் அளித்த  சின்மயி  நான் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை. வைரமுத்தை கல்யாணத்திற்கு அழைக்கவில்லை என்றால் பிரச்சனையாகும். கேள்வி கேட்பார்கள். அதனால் அப்போது அவரை திருமணத்திற்கு அழைத்தேன் என்றுள்ளார். மேலும் காலில் விழுந்தது குறித்து, நான் அங்கு எல்லோருடைய காலிலும் விழுந்தேன். எனக்கு அங்கு வேறு வழி தெரியவில்லை. வைரமுத்து காலில் மட்டும் விழவில்லை என்றால் பிரச்சனை ஆகி இருக்கும். அதனால் அப்படி செய்தேன் என்றுள்ளார்.

இந்த நிலையில் வலதுசாரி அமைப்புகள் வைரமுத்துக்கு எதிராக உள்ளது இன்னொரு கேள்வியை எழுப்பி உள்ளது. ஆண்டாள் விவகாரம் காரணமாக இப்படி வைரமுத்துவை வலதுசாரி கொள்கை கொண்டவர்கள் திட்டுகிறார்கள். இது பொய்யான புகார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆண்டாள் பிரச்சனை மீண்டும் விவாதம் ஆகியுள்ளது.

இந்த நிலையில் இவ்வளவு நாள் ஏன் சின்மயி இதை சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. 13 வருடமாக இந்த விஷயத்தை சின்மயி வெளியே சொல்லவில்லை. இப்போது ஏன் புகார் அளிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் அவர் விளக்கம் அளித்துளளார். அதில், ஆம் இவ்வளவு நாளாக எனக்கு இதை சொல்ல தைரியம் இல்லை. அதற்கான சூழ்நிலை இல்லை. இப்போதுதான் வீட்டில் கணவரிடம் சொன்னேன். அதன் பின்பே தைரியம் வந்தது. எல்லோரிடமும் சொல்கிறேன் என்றுள்ளார்.