நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது போட்டியாளர்களை அடக்கி ஒடுக்குகிற சர்வாதிகாரி டாஸ்கின் ராணி ,ஐஸ்வர்யாவிற்கு எதிராக பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும்குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மஹத், யாஷிகா, ஷாரிக் போன்றோர் சிறை கதவை திறக்க சொல்லி போராடினர். இதனால் அந்த கதவை திறக்க முயன்றனர் சக போட்டியாளர்கள்.

இந்த செயலை தடுக்க ஐஸ்வர்யா வந்த போது அவரை தூக்கி நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டனர் பொன்னம்பலமும் சென்றாயனும். இதனால் கோபமான ஐஸ்வர்யா, கோபத்தில் அழுதபடி கத்திக்கொண்டே வீட்டினுள் சென்றார்.

பிக் பாஸ் கொடுத்த இந்த டாஸ்க் ஒருவழியாக நேற்று நிறைவடைந்துவிட்டது. இந்த டாஸ்கை நல்லமுறையில் செய்ததாக ஐஸ்வர்யாவும் பிக் பாஸ் தரப்பில் பாரட்டப்பட்டார். ஆனால் அவர் செய்த அட்டூழியத்தால் கடுப்பான சக போட்டியாளர்களும், மக்களும். அவர் மீது கடும் கோபத்தில் தான் இன்னமும் இருக்கின்றனர்.

இதனிடையெ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் பிரமோவில், பொன்னம்பலத்தை பிக் பாஸ் வீட்டை விட்டு அன்னியப்படுத்தி இருக்கிறார் பிக் பாஸ். இதனால் அவரது சில உடைமைகளை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டின் வாசலில் போய் இருக்கிறார் பொன்னம்பலம். அங்கே தான் உறங்கவும் செய்கிறார்.

 

எதுக்கு இந்த முடிவுனு தெர்லயே! 🤔🤔 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/LvksVAtbyK

— Vijay Television (@vijaytelevision) August 3, 2018

இதனிடையே “நானோ ஷாரிக்கோ இப்படி செய்திருந்தா விட்டிருப்பாங்களா?” என்பது போல கேள்வி எழுப்புகிறார் வைஷ்ணவி. இதை எல்லம் பார்க்கும் போது சர்வாதிகாரியான ஐஸ்வர்யாவை தண்ணீரில் தள்ளியதற்கு தான், பொன்னம்பலத்தை இப்படி பிக் பாஸ் தண்டித்திருக்கிறாரோ? என சந்தேகம் எழுகிறது. உண்மையில் எதற்கு இந்த தண்டனை? என பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தான் தெரியப்போகிறது.