தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்றென்றும் ரஜினி தான் அவருக்கு அப்படி ஒரு மவுசு இன்னும் இருக்கிறது. சூப்பர் ஸ்டார் படம் என்றால் கண்டிப்பாக லாபம் இருக்கும் என்பது விநியோகஸ்தர்களின் கருத்தும் கூட. அவருக்கு அடுத்தபடியாக இந்த இடத்தை யார் வகிக்கிறார் என்பதை குறித்து தற்போது விநியோகஸ்தர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது.

விஜய், அஜீத், சூர்யா போன்றோர் இந்த பட்டியலில் முன்னணியில் இருக்கின்றனர். இவர்கள் மூவருமே அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தாண்டி தனக்கு என ஒரு முத்திரையை திரைத்துறையில் பதித்து கொண்டவர்கள்.

கோலிவுட்டை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகரின் நடிப்பிலும் வரக்கூடிய படங்களும் வெற்றி தோல்வி என இரண்டையும் கடந்து தான் வருகின்றனர். அந்த வகையில் பார்க்கும் போது வசூலில் எப்போதும் மாஸான வெற்றி தரும் நடிகர் என்று கூறுகையில் தளபதி விஜயை தான் கைகாட்டி இருக்கின்றனர் விநியோகஸ்தர்கள்.