பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் தற்போது வரை, அனைவரும் உண்மையான முகத்தை வெளிக்காட்டாமல் போலித்தனமாகவே விளையாடி வருவதாக ரசிகர்கள் பலர் கூறி வருகிறார்கள்.

 

மேலும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்லும் பிரபலங்களும், இதோ வார்த்தையை தான் கூறி வருகிறார்கள்.

 இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், பாலாஜி மற்றும் டானி இருவரும் தனித்தனியான சோபாவில் அமர்ந்துள்ளனர். அப்போது இவர்களிடம் நடிகை ரித்விக்கா 'யாரு இங்க Fake ஆக இருக்கிறார் என்கிற கேள்வி எழுப்பினார்.

இதற்கு பாலாஜி கண்டிப்பாக அது டானி தான் என கூறுகிறார். இதற்கு பாலாஜி காரணமும் கூறுகிறார். "நானும் காமெடி செய்வேன் ஆனால் ஒருவரை புண் படுத்துவது போல் காமெடி செய்யமாட்டேன் டானி அப்படி இல்லை என கூறுகிறார். 

இதற்கு டானி , பாலாஜியை பார்த்து நீங்கள் மற்றவர்களை பற்றி பின்னால் பேசுகிறீர்கள் என்று சொல்லப்பட்டது. தற்போது அதை விட்டுடீங்களா..? என கேட்கிறார். இதற்கு பாலாஜி இல்லை என கூறுகிறார்.

 

இதன் மூலம் இன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் அவரவர் மீது உள்ள தப்புகளை அவர்களையே தானாக ஒற்றுக்கொள்வார்கள் என கூறப்படுகிறது.