இமைக்கா நொடிகள் திரைப்படத்தை பார்த்த அனைவருக்குமே அதில் வரும் அந்த துறு துறு குட்டி குழந்தையை மறக்க முடியாது. தைரியமான சிபிஐ ஆபிசராக நடித்திருந்த நயன்தாராவின் மகளாக நடித்திருந்த அந்த குட்டி குழந்தையும், நயன்தாரா போலவே நடிப்பிலும் வசனங்கள் பேசுவதிலும் ரசிகர்களை அசத்தி இருந்தது. 

அந்த குழந்தை வேறு யாருமில்லை நடிகர் கொட்டாங்குச்சியின் மகள் தான். விஜயுடன் பெரும்பாலான படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.யூத் படத்தில் கூட இவர் விஜயிடம் எந்த பொண்ணும் என்ன திரும்பி பார்க்க மாட்டேங்குது என வருத்தத்துடன் பேசுவது போன்ற ஒரு காட்சி வரும். அப்போது விஜய் அவரிடம் உன்னை நீயே தாழ்த்திக்காத. 

நம்பிக்கையும் உண்மையான காதலும் இருந்தா உலக அழகி கூட உன் பின்னாடி வருவா என கூறுவார். 
அந்த படத்தில் விஜய் கூறி இருந்த விஷயங்கள் தற்போது கொட்டாங்குச்சியின் வாழ்க்கையில் நிஜமாகி இருக்கிறது. இதனை கொட்டாங்குச்சியின் குடும்ப படத்துடன் ,யூத் படத்தில் வரும் வீடியோ காட்சியையும் இணைத்து போட்டு ,டிவிட்டரில் பிரபலமாக்கி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

அந்த டிவிட்டர் ட்வீட்டில் விஜய் ஒரு தீர்க்கதரிசி என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். இமைக்கா நொடிகள் படத்தில் இந்த குட்டி தேவதையின் நடிப்பை பார்த்து தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருவது இந்த க்யூட்டான குடும்பத்திற்கு மேலும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. நிஜமாவே விஜய் தீர்க்கதரிசி தான் போல.