பிரதமர் நரேந்திர மோடி படத்தில் மோடியாக நடித்தவரும் பிரபல இந்தி நடிகருமான விவேக் ஓபராய் தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை தற்போது நடந்து வரும் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டுப் போட்டிருக்கும் ஒரு ட்விட் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

இன்று மதியம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் இருக்கும் புகைப்படத்துக்கு ‘தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள்’ என்று தலைப்பிட்ட விவேக் அடுத்த இரண்டாவது படத்துக்கு ‘தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்று தலைப்பிட்டிருக்கிறார்.மூன்றாவதாக ஐஸ் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் குழந்தையுடன் உள்ள படத்துக்கு தேர்தல் முடிவு என்று தலைப்பிட்டிருக்கிறார்.

முதலில் ஐஸ்வர்யா சல்மானைக் காதலித்தார். அடுத்த அவரது விவேக் ஓபராயுடனான காதல் நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் திருமணம் நடந்ததென்னவோ அபிஷேக்குடன் தான். எனவே கருத்துக்கணிப்புகளின் முடிவுகளும் இப்படி எதிர்பாராமல் தான் இருக்கும் என்ரு பொருள்பட ப்ளாக் காமெடி ட்விட்டராக அப்பதிவை போட்டிருந்தார் விவேக்.

அவரது இந்த ட்விட்டர் பதிவுக்கு பெரும்பாலான ஆண்கள் சிரித்து மகிழ்ந்து ரசிக்க தாய்க்குலங்களோ மோடியா நடிச்சபிறகு இவ்வளவு மட்டமான டேஸ்டா உனக்கு? என்று கிழித்துத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.