சமூக வலைதளங்களில் எழுந்த கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து தந்து முன்னாள் காதலியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் குறித்த மட்டமான பதிவை நீக்கி மன்னிப்பும் கோரினார்.

தேர்தல் கணிப்புகளுடன் ஒப்பிட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த மீம்ஸை சமூக வலைதளத்தில் நடிகர் விவேக் ஓபராய் வெளியிட்டார். இந்த படம் நடிகை ஐஸ்வர்யா ராயின் தனிமனிதஒழுக்கத்தை சீண்டிப்பார்க்கும் விதத்தில் இருந்தது.அதாவது, நடிகர் சல்மான் கான்-ஐஸ்வர்யா ராய் இணைந்து எடுத்த படம், தம்முடன் ஐஸ்வர்யா ராய் எடுத்த புகைப்படம், கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் எடுத்த படம் ஆகியவற்றை இணைத்து விவேக் ஓபராய், ட்விட்ரில் பதிவிட்டிருந்தார்.

இதில் முதல் படத்துக்கு கருத்து கணிப்பு, 2-வது படத்துக்கு  வாக்கு கணிப்பு, மூன்றாவது படத்துக்கு தேர்தல் முடிவு என அவர் குறிப்பிட்டிருந்தார்.ஐஸ்வர்யா ராயின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக சித்தரிக்கும் வகையில் இந்த படம் இருந்ததாக ட்விட்டரில் பேசப்பட்டு, கண்டனம் எழுந்தது. விவேக் ஓபராயின் ட்வீட்டுக்கு தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியது.

மகளிர் ஆணையம் செய்த ட்விட்டில் , விவேக் ஓபராயின் பதிவு மிகவும் குற்றமானது, நெறிமுறைகளை மீறியது, பெண்களின் மாண்பு மீதும், பெண்கள் மீதும் அவர் எந்த அளவுக்கு அவமரியாதை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து விவேக் ஓபராய் அளித்த பேட்டியில் நான் செய்ததில் ஏதேனும் தவறு இருக்கிறதா, ஏதேனும் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதா, மோசமான படமாக இருக்கிறதா, தேர்தல்நேரத்தில் உருவாக்கப்பட்ட வித்தியாசமான இந்த மீம்ஸை பார்த்தவுடன் நான் சிரித்தேன். இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்பதில் எந்த தயக்கமும் இல்லை. மன்னிப்பு கேட்பதில் நான் வல்லுநர். ஆனால், நான் என்ன தவறு செய்தேன் என்பதை மட்டும் சொல்லிவிடுங்கள்.மகாராஷ்டிரா மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸை எதிர்பார்த்திருக்கிறேன். அந்த நோட்டீஸ் வந்தவுடன் அவர்கள் முன் நேரில் சென்று என் விளக்கத்தை அளிப்பேன். நான் ஏதேனும் தவறு செய்ததாக நினைக்கவில்லை.எதற்காக இதை பெரிய விஷயமாக ஆக்குகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை’என்றார்.

 இதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து அந்த சர்ச்சையான பதிவை நீக்கியுள்ளார் விவேக் ஓபராய்.